ஜெய்ப்பூர் மன்னர் இரண்டாம் ஜெய்சிங் அவர்களால் கட்டப்பட்ட இந்த சந்திர மஹால் சிட்டி பேலஸ் அரண்மனையில் அமைந்துள்ளது. சிட்டி பேலஸ் அரண்மனையின் ஏழில் ஒரு பங்கு இடத்தை இந்த மாளிகை கொண்டுள்ளது.
தற்சயம் இதில் ஜெய்பூர் ராஜவம்சத்தினர் வசித்து வருகின்றனர். அழகிய பூ அலங்கார வேலைப்பாடுகள், கண்ணாடிகள் பொதித்த சுவர்கள் மற்றும் சுவரோவியங்கள் ஆகியவற்றை இந்த மாளிகையில் காணலாம்.
ஏழு அடுக்குகளால் ஆன ஒரு சிறு கோட்டையையும் இது கொண்டுள்ளது. இதில் முதல் இரண்டு தளங்கள் சுக் நிவாஸ் ஹால் எனும் கூடத்தின் அங்கமாக காணப்படுகின்றன.
இவை தவிர ரங் மந்திர், ஷோபா நிவாஸ் அல்லது அழகு மஹால் மற்றும் சாவி நிவாஸ் அல்லது கண்ணாடி மாளிகை போன்றவையும் இங்கு இடம்பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications