ஜெய்ப்பூர் பிரதான நகரத்திலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஜம்வா ராம்கர் எனும் பிரசித்தமான கிராமம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் இங்குள்ள செயற்கை ஏரி மற்றும் காட்டுயிர் சரணாலயத்திற்காக புகழ் பெற்று விளங்குகிறது.
இங்குள்ள ஏரிப்பகுதி பறவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. பலவிதமான உள்நாட்டுப்பறவைகள் மற்றும் புலம்பெயர் பறவைகளை இங்கு காணலாம். மேலும், இங்குள்ள காட்டுயிர் சரணாலயத்தில் பலவிதமான காட்டு உயிர்கள் மற்றும் தாவரங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
பயணிகள் இந்த சரணாலயத்தில் காட்டுச்சுற்றுலா எனப்படும் ‘ஜங்கிள் சஃபாரி’ யையும் மேற்கொள்ளலாம்.ஏரி மற்றும் காட்டுயிர் சரணாலயம் தவிர்த்து இந்த கிராமத்தில் கோயில்கள், ஹவேலிகள் மற்றும் பழமையான கோட்டைகள் போன்றவற்றையும் பயணிகள் ரசிக்கலாம். இங்கு ஜெய்ப்பூர் மன்னர்களின் நினைவு மாடங்களும் இடம் பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications