ஜமுய் நகரில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது பட்னேஷ்வர் மந்திர். இக்கோவில் இருந்த இடத்தில் ஒரு காலத்தில் கோஸ்வாமி குடும்பத்தாரின் வாழ்விடமாக இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாள் கோஸ்வாமி, வனத்தில் ஏதோ மின்னுவதை கவனித்தார். அருகே சென்று பார்த்த போது அது ஒரு சிவலிங்கம் என்பதை அவர் கண்டறிந்தார்.
கடைசியாக, ஹிந்து மாதமான ஷ்ரவனில் கி.பி. 1711-ஆம் ஆண்டு இக்கோவில் கட்டப்பட்டது. இங்கிருக்கும் சிவலிங்கத்தை சுற்றி 2 அடி மண் சுவர் ஒன்று எழுப்பப்பட்டு லிட்டர் கணக்கில் தினமும் அதற்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த கோவிலில் உள்ள விசேஷம் என்னவென்றால் இவ்வளவு பால் ஊற்றியும் இந்த சிவலிங்கம் மூழ்குவதில்லை. இந்த லிங்கத்தை காம்னா லிங்கம் என்றும் அழைக்கின்றனர்.
இதன் அழகிய சுற்றுப்புறத்துக்கும் அருகில் காணப்படும் கியுல் நதிக்காகவும் இந்த கோவில் மேலும் புகழ் பெற்றுள்ளது. இதனை சுற்றியுள்ள மலைகள் இங்கு இயற்கை நறுமணத்தை வீசச் செய்யும்.



Click it and Unblock the Notifications