சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக இந்த ஆத்பர் அஷ்டபுஜி எனும் இடம் பிரசித்தமாக விளங்குகிறது. எட்டு கரங்களை கொண்ட தேவியின் அவதாரம் இங்கு கோயில் கொண்டிருக்கிறது.
நவராத்திரி திருநாளின்போது இங்கு ‘ஜோதி கலாஷ்’ எனப்படும் தீபவிளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த வண்ணமயமான காட்சியை காண்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
தொன்மையான கட்டிடக்கலை அம்சங்களோடு காட்சியளிக்கும் ஆத்பர் கோயிலில் பாரம்பரிய சடங்கு முறைகள் மற்றும் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. சத்திஸ்ஹர் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் இந்த ஆத்பர் அஷ்டபுஜி கோயிலுக்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகள் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications