இந்த தேவார் கட்டா எனாப்படும் ஆற்று சங்கம ஸ்தலம் ஜாஞ்ச்கிர் நகர்ப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக அமைந்திருக்கிறது. ரம்மியமான இயற்கைக்காட்சிகள் சூழ்ந்துள்ள இந்த இடம் மஹாநதி, லீலாகர் மற்றும் ஷிவ்நாத் ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது.
சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த இடத்திற்கு விஜயம் செய்து பொழுதுபோக்கி மகிழ்கின்றனர். புகைப்பட ரசிகர்கள் ஒரு முறை இந்த எழிற்ஸ்தலத்துக்கு விஜயம் செய்தபின் திரும்பவும் வருகை தராமல் இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications