ஹய்ஹய்வன்ஷ் வம்ச மன்னர்களால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோயில் ஜாஞ்ச்கிர் நகரத்தில் பூரணி பஸ்தி எனும் இடத்திலுள்ள பீமா தலாப் எனும் ஏரிக்கருகில் அமைந்திருக்கிறது.
இரண்டு பிரிவுகளாக கட்டத்துவங்கப்பட்ட இந்த கோயில் வளாகத்தின் கட்டுமான பணிகள் பாதியில் நின்று போனதால் அந்த இரண்டு பிரிவுகளுமே இரண்டு தனித்தனி கோயில்களாக நிலை பெற்றுவிட்டன. இன்றும் இந்த இரண்டு கட்டமைப்புகளின் நிறைவடையாத தோற்றத்தை பார்க்க முடிகிறது.
இந்த கோயிலில் அற்புதமான ஆண், பெண் தெய்வச்சிற்பங்களை பார்த்து ரசிக்கலாம். கந்தர்வர்கள் எனப்படும் மனிதக்கடவுள் ரூபங்கள் மற்றும் கின்னரர்கள் எனப்படும் பிரிவினர் ஆகியோரின் சிற்பவடிவங்களும் இங்கு மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷ்ணு கோயிலை உள்ளூர் மக்கள் ‘நகடா மந்திர்’ என்றும் அழைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications