Search
  • Follow NativePlanet
Share

ஜல்லாங் – நிரம்பி வழியும் இயற்கை எழில் அம்சங்கள்!

4

மேற்கு வங்காள மாநிலத்தின் முக்கியமான நகரமான காலிம்போங் செல்லும் வழியில் ஜல்தகா ஆற்றங்கரையில்  இந்த ஜல்லாங் நகரம் அமைந்துள்ளது. இமயமலைத்தொடர்களின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் இந்த நகரத்திலிருந்து இமாலயத்தின் பிரம்மாண்ட எழிற்காட்சிகளை பார்த்து ரசிக்கமுடியும் என்பது இந்த நகரத்தின் விசேஷமான அம்சமாகும்.

கலாச்சார அடையாளம்!

ஜல்லாங் நகரம் சிலிகுரிக்கு வெகு அருகில் 100 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்தியா – பூடான் எல்லையில் வீற்றிருப்பதால் இப்பகுதியின் உணவுமுறை, பாரம்பரியம் மற்றும் திருவிழா சடங்குகள் போன்றவற்றில் பூடான் கலாச்சாரத்தின் பாதிப்பை அதிக அளவில் உணர முடியும்.

பறவைகள் மற்றும் தேனீக்கள்!

பறவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக விளங்கும் இப்பகுதியில் பலவகையான மலைப்பிரதேச பறவைகள் வசிக்கின்றன. லாஃபிங் திரஷ், ரெட்ஸ்டார்ட், பிரவுன் டிப்பர் மற்றும் இதர சில புலம்பெயர் பறவைகளை இங்கு பார்த்து ரசிக்கலாம்.

இவை தவிர இன்னும் ஏராளமான பறவை இனங்களை நீங்கள் ஜல்லாங் பறவைகள் சரணாலயம் அல்லது கொருமாரா காட்டுயிர் சரணாலயத்திலும் பார்த்து ரசிக்க முடியும். ஜல்தகா ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஒரு நவீன நீர்மின் உற்பத்தி நிலையமும் இந்த ஜல்லாங் நகரத்திலுள்ள முக்கிய அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

ஜல்லாங்– சுற்றுலா அம்சங்கள்

ஜல்லாங் பகுதியிலுள்ள பிந்து அணை இந்தியா – பூடான் பகுதியை இணைக்கும் பாலமாகவும் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகவும் அமைந்துள்ளது. ஏலக்காய் பதனிடும் நிலையம் மற்றும் நேபாளத்திலுள்ள கோதக் போன்ற இடங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

டோட்டோபாரா பாறை எனும் சிறிய மலைக்குன்று இங்கிருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதிலிருந்து தோர்ஸா ஆற்றின் அழகை மிக நன்றாக பார்த்து ரசிக்க முடியும். இவை தவிர ஜல்தபரா தேசியப்பூங்காவிற்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

பிரயாண வசதிகள்

மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு உச்சியில் வீற்றிருக்கும் இந்த நகரத்திலிருந்து பூடான் நாட்டின் நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உண்டு. சிலிகுரி விமான நிலையம் இந்த நகரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். அங்கிருந்து மும்பை டெல்லிக்கு விமான சேவைகள் உள்ளன.

ஜல்லாங் சிறப்பு

ஜல்லாங் வானிலை

சிறந்த காலநிலை ஜல்லாங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜல்லாங்

  • சாலை வழியாக
    சிலிகுரியிலிருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஜல்லாங் நகரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 31 மற்றும் 31C வழியாக வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அருகிலுள்ள சிலிகுரி ரயில் நிலையம் ஜல்லாங் நகரத்துக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிலிகுரி விமான நிலையம் ஜல்லாங் நகரத்திற்கு அருகில் உள்ளது. இங்கிருந்து நாட்டின் இதர பகுதிகள் மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue