பல்சாமந்த் ஏரியானது பலக் ராவ் பரிஹார் என்பவரால் 1159ம் ஆண்டு கட்டுவிக்கப்பட்டுள்ளது. இது ஜோத்பூர்-மந்தோர் சாலையில் உள்ளது. இந்த ஏரியைச்சுற்றி அமைந்துள்ள அழகிய பூங்காத்தோட்டத்தில் குள்ளநரிகள் மற்றும் மயில்கள் வசிக்கின்றன என்பது ஒரு விசேஷமான தகவலாகும்.
இந்த ஏரியை நோக்கியவாறே பல்சாமந்த் ஏரி அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை ஜோத்பூர் ராஜவம்சத்தினர் கோடைக்காலத்தில் ஓய்வெடுக்கும் விசேட வசிப்பிடமாக திகழ்ந்திருக்கிறது.
பாரம்பரிய ராஜஸ்தானிய கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை தற்சமயம் ஜோத்பூரின் பிரபலமான பாரம்பரிய விடுதிகளில் ஒன்று எனும் புகழுடன் அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications