தக்கத் சாஹர் மலையின் மீது சித்தநாத் ஷிவ் கோயில் என்றழைக்கப்படும் இந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் வழி கடினமானதாக ஜோத்பூரின் நீர் நிலையத்துக்கு வலப்புறமிருந்து துவங்குகிறது.
பின்னர் பாறைகளில் வெட்டப்பட்டுள்ள படிகளின் மீது ஏறி இக்கோயிலை அடைய வேண்டியுள்ளது. இப்பிரதேசத்தில் மனித நடமாட்டமே இல்லாதிருந்த காலத்திலிருந்து இக்கோயிலின் வரலாறு துவங்குகிறது.
அக்காலத்தில் பிரபலமாக அறியப்பட்டிருந்த வீட்ராகி நாராயன் ஸ்வாமி எனும் யோகி இந்த இடத்தின் தனிமையால் கவரப்பட்டு இங்கு வசிக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது.
பின்னர் கௌரிஷங்கர் எனும் மற்றொரு யோகியும் இங்கு வசித்துள்ளார். நான்கு விரல்கள் கொண்ட ஊனமுற்றவரான அவர் பின்னாளில் ‘நேபாளி பாபா’ என்று பிரபல்யமாக அறியப்பட்டார்.
சுயமாக பாறைகளை வெட்டி ஒரு பெரிய கோயிலையும் அவர் உருவாக்கினார். அதுவே தற்காலத்தில் சித்தநாத் ஷிவ் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயிலாகும்.



Click it and Unblock the Notifications