Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்தாங்க் » ஈர்க்கும் இடங்கள் » மகே மேளா

மகே மேளா, ஜோர்தாங்க்

16

ஜோர்தாங்கின் மற்றுமொரு சிறப்பு மகே மேளா என்னும் விழா. இது ஆண்டுதோறும் ஜனவரி மாதங்களில், இங்கு மிகவும் விமரிசையாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

சுற்றுலாப்பயணிகள் இவ்விழாவில் பங்கெடுக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன், இதில் கலந்துகொண்டு களிக்கிறார்கள். இப்பகுதியில் வசித்துவரும் மக்களின் பெருமைக்குரிய கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையும், சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைத்து அறிமுகப்படுத்தும் வகையில், இவ்விழா ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

1955 ஆம் ஆண்டு ஜோர்தாங்கில் நடத்தப்பட்ட வேளாண்மைத்திருவிழாவிலிருந்து இந்த மேளா கொண்டாடப்படத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மகே மேளா என்னும் இக்கலாச்சாரத் திருவிழா சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. பழங்காலத்திலிருந்து பேணப்பட்டு வரும் சிக்கிம் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக்கூறும், ஜோர்தங்க் மாரத்தான், ஃபேஷன் ஷோக்கள், கலாச்சார நடனப்போட்டிகள், பலூனில் பறத்தல், சறுக்கு விமானத்தில் பறத்தல், படகு சவாரி செய்தல், அழகிப்போட்டிகள், வில்வித்தைப் போட்டிகள் எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இவ்விழாவில் நடத்தப்படும்.

மேற்படி விளையாட்டுக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அல்லாது, சிக்கிமின் கலாச்சார உணவுத் திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது. இதில் பல்வேறு வகையான உணவுகள் விற்கப்படுகின்றன. மேலும் சிக்கிம் மக்களின் கைவினைத்திறனை வெளிப்படுத்தும் கைவினைப்பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed