அஸ்ஸாமை ஆண்டு வந்த முதல் அஹோம் அரசரின் நினைவாக சுகாபா சாமன்னே ஷேத்ரா கட்டப்பட்டுள்ளது. ஜோர்கட் மற்றும் தேர்கோன் பகுதிகளுக்கு அருகில் சுகாபோ சாமன்னே ஷேத்ரா கட்டப்பட்டுள்ளது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு அஸ்ஸாமை ஆண்டு வந்த அஹோம் அரசை தோற்றுவித்தவராக சுகாபா உள்ளார். பாட்காய் மலைகளைத் தாண்டி, இந்த பகுதிக்கு வந்த தாய்லாந்து இளவரசர் தான் சுகாபா.
இந்த பகுதியில் வசித்து வந்த பழங்குடியினர் மற்றும் பழங்குடியினரல்லாத மக்களை ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கியவர் இவரே. சுகாபாவின் இணையில்லாத மற்றும் சிறந்த தலைமையைப் பறைசாற்றும் பொருட்டாகவே சுகாபா சாமன்னே ஷேத்ரா கட்டப்பட்டது. இந்த இடத்தில் சில ஆர்வமூட்டும் சங்கதிகளும் உள்ளன.
தற்போது இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்த அகழ்வாராய்ச்சியின் மூலம் அஹோம் அரசின் நினைவுச்சின்னங்களை கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த சுகாபா சாமன்னே ஷேத்ராவை அடைய டாக்ஸிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பேருந்துகளை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications