Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜொவாய் » ஈர்க்கும் இடங்கள் » ஜொவாய் பிரிஸ்பைடீரியன் சர்ச்

ஜொவாய் பிரிஸ்பைடீரியன் சர்ச், ஜொவாய்

7

ஜொவாய் பிரிஸ்பைடீரியன் சர்ச், வெல்ஷ் பிரிஸ்பைடீரியன் மிஷனால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்று என்கிற பெருமை இந்த தேவாலயத்திற்கு உண்டு.

இந்த தேவாலயம் பொதுவான பிரிட்டிஷ் கால கட்டிடக்கலை கட்டிடக் கலையை பிரிபலிப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு சிறந்த விஷயமாகும். தேவாலயத்தின் உள் அரங்கு மிகவும் விசாலமானது.

மேலும் இந்த தேவாலய வளாகமானது ஏராளமான மக்களுக்கு இங்கு சீரான இடைவெளியில் நடைபெறும் பிரார்த்தனை நேரத்தில் தாரளமாக இடமளிக்கின்றது. மிகுந்த அமைதியான இடத்தில் அமைந்துள்ள இந்த தேவாலயமானது இங்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய உதவுகின்றது.

மேலும் இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலை நகர இரைச்சலில் இருந்து விடுபட்டு அமைதியாக பிரார்த்தனை செய்ய உதவுகின்றது. சுமார் 150 ஆண்டு வரலாறு கொண்ட இந்த  தேவாலயத்திற்கு ஆண்டு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த தேவாலயத்தை  ஷில்லாங்-ஜொவாய்  நெடுஞ்சாலையை பயன்படுத்தி எளிதில் அடையலாம். இந்த தேவாலயத்தை அடைய பஜார் பேருந்துளை பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஏனெனில் அவை பெரும்பாலும் பொருட்கள் நிறைந்து இருக்கும். ஜொவாய் ஷில்லாங்கில் இருந்து சுமார் 64 கிலோமீட்டர் உள்ளதால் ஜொவாயை தனியார் வாடகை வாகனத்தை பயன்படுத்தி எளிதாக அடையலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed