மஹாராஷ்டிராவில் ஔரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஜுன்னர் குகைகள் ஒரு பிரபலமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகின்றன. இரண்டாம் நூற்றாண்டு, மற்றும் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த குகைகள் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் நிபுணர்களிடையே பிரசித்தமான ஸ்தலமாக விளங்குகின்றன. இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை ஆராய இவர்கள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.
ஜுன்னர் குகைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மன்மோடி குகைகள், கணேஷ் லேனா குகைகள் மற்றும் துல்ஜா குகைகள் என்பவையே அவை. இவற்றில் மன்மோடி குகைகள் இப்பெயரிலேயே அழைக்கப்படும் மலையில் உள்ளன.
இந்த குகையில் உள்ள கட்டிடக்கலை வேலைப்பாடுகளும் கலையம்சங்களும் மிகப் பிரசித்தி பெற்றுள்ளன. வட்டவடிவ குமிழ்மாடக்கூரையுடன் கூடிய ஒரு சைத்யா சபைக்கூடத்தைக்கொண்டுள்ள துல்ஜா லேனா குகைகளும் குறிப்பிடத்தக்க புகழைப்பெற்றுள்ளன.
கணேஷ் லேனா குகைகள் ஜுன்னரிலிருந்து தெற்கே 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. இங்கு பல விஹாரங்களும், சன்னதிகளும் காணப்படுகின்றன. அவற்றுள் ஆறாவது சைத்யா குகை மற்றும் கணேஷ் லேனா குகை இரண்டும் மிக பிரசித்தமாக அறியப்படுகின்றன.