ஷிவ்னேரி கோட்டை, ஜுன்னர்

ஜுன்னருக்கு அருகிலுள்ள இந்த ஷிவ்னேரி கோட்டை அதன் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்காகவும், சிவாஜி மஹாராஜ் பிறந்த ஸ்தலம் என்பதாலும் புகழ் பெற்று விளங்குகிறது. 1630 ம் ஆண்டில் இந்த கோட்டையில் பிறந்ததோடு மட்டுமல்லாமல் தனது போர்ப்பயிற்சியையும் சிவாஜி இந்த கோட்டையிலேயே பெற்றுள்ளார்.

இந்த கோட்டையில் நுழைவதற்கு 7 வாசல்களை கடக்க வேண்டியிருப்பது பயணிகளை பிரமிக்க வைக்கும் ஒரு அம்சமாக உள்ளது. படாமி தலாவ் எனப்படும் ஒரு சிறிய தடாகமும் இந்த கோட்டை வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவாஜி மஹராஜின் வீரத்தாயான ஜீஜாபாய் அவர்களின் திருவுருவச்சிலையையும் பார்க்கலாம்.

இந்த கோட்டைக்கு அருகாமையிலேயே ஒரு ஷிவானி தேவி கோயிலும் அமைந்துள்ளது. இதுவும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

Please Wait while comments are loading...