டீஸ்டா பஜார் என்பது டீஸ்டா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். அது காலிம்பொங்கில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தை தருகின்றது.
இந்த நகரம் பயணிகளுக்கு சிறந்த உணவுகளையும், அற்புதமான புகைப்பட வாய்ப்புக்கள், சுத்தமான காற்று மற்றும் மலிவான உள்ளூர் ஷாப்பிங் போன்றவற்றை வழங்குகிறது.
இங்கு குத்துவாள், காலணி மற்றும் பாரம்பரியமான விளக்குகள் போன்றவற்றை வாங்கலாம். இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களிலும் சீன, திபெத் மற்றும் பூட்டானின் செல்வாக்கு இருக்கிறது.
இங்கு ஆற்றில் படகு விடுவது ஒரு பிரபலமான விளையாட்டாக உள்ளது, மேலும் இந்த இடத்தில் இருந்து தான் டீஸ்டா ஆறு மேற்கு வங்காளத்திற்குள் நுழைகின்றது. இந்திய இராணுவ துருப்புக்கள் தொடர்ந்து இந்த எல்லைப் பகுதியில் ரோந்து சுற்றி வருவதால் இந்தப் பகுதி எப்பொழுதும் பரபரப்பு நிறைந்து காணப்படுகின்றது.



Click it and Unblock the Notifications