Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கந்தமால் » வானிலை

கந்தமால் வானிலை

செப்டம்பர் முதல் மே  வரையிலான மாதங்கள் கந்தமால் பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. வழக்கமாக காணப்படும் உஷ்ணத்திலிருந்து இக்காலத்தில் பயணிகள் தப்பித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த குளிர்காலத்தில் பனிமூடி காட்சியளிக்கும் கந்தமால் பகுதியின் இயற்கை அழகை பார்த்து ரசிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

கோடைகாலம்

கந்தமால் சுற்றுலாத்தலம் கோடைக்காலத்தில் உபவெப்பமண்டலப் பருவநிலையுடன்  கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி நிரம்பிய சூழலை கொண்டுள்ளது. குறுகிய காலத்திற்கே நீடிக்கும் கோடைக்காலம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தின் முதல் வாரம் வரை நீள்கிறது. இருப்பினும் தரிங்பாடி மற்றும் பெல்கார் போன்ற சுற்றுலாத்தலங்கள் வருடம் முழுக்கவே குளுமையாக காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் அமைந்திருப்பதே இதற்கு காரணம். எனவே இவை ஒடிஷா மாநிலத்தின் சிறந்த கோடை வாசஸ்தலங்களாக அறியப்படுகின்றன.

மழைக்காலம்

ஜுன் மாதத்திலிருந்து கந்தமால் பகுதியில் மழைக்காலம் துவங்கி செப்டம்பர் மாதத்தின் பாதி வரை நீடிக்கிறது. மழைக்காலத்தில் கடுமையானது முதல் மிதமானது வரையான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது. நீர்வீழ்ச்சிகள் நிரம்பி வழிவதால் அற்புதமான எழிலுடன் மழைக்காலத்தில் இப்பகுதி பயணிகளை கவர்கிறது.  

குளிர்காலம்

கந்தமால் பகுதியில் குளிர்காலம் மிக நீண்டதாக காணப்படுகிறது. இது அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் தரிங்பாடி போன்ற இடங்களில் வெப்பநிலை 0°C  வரை சரிகிறது.  பனிப்பொழிவும் அதிகம் காணப்படலாம். இதர இடங்களில் சராசரி வெப்பநிலையாக 3°C  அல்லது 4°C  வரை நிலவக்கூடும்.