தரம்ஷாலாவிலிருந்து 52கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பாபா பரோஹ் கோயில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக புகழ்பெற்றுள்ளது. கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பி. ஆர். ஷர்மா எனும் உள்ளூர் பக்தரால் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஹிமாசலப்பிரதேசத்திலேயே அதிக வெண்பளிங்குக்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் கோயிலாக இது அறியப்படுப்படுகிறது.
இந்த கோயிலின் உள்ளே காணப்படும் துர்க்கை சிலை உலோகத்தால் ஆனதாக காட்சியளிக்கிறது. பாபா பரோஹ் கோயிலுக்கு அருகிலேயே காளி நாத் போலே ஷங்கர் எனும் புராதனமான கோயிலும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications