காங்க்ரா மாவட்டத்தில் உள்ள கத்கர் எனும் இடத்தில் இந்த சிவன் கோயில் உள்ளது. தரம்ஷாலாவிலிருந்து 54.7கி.மீ தூரத்திலும் சிம்லாவிலிருந்து 181 கி.மீ தூரத்திலும் இந்த கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபடுவதற்காக கத்கர் நகருக்கு அதிக யாத்ரீகர் வருகை தருகின்றனர். இரண்டு பிரிவுகளாக பிளந்தாற்போன்ற அமைப்பை கொண்ட ஒரு வித்தியாசமான பிரம்மாண்ட சிவலிங்கம் இந்த கோயிலில் உள்ளது.
இந்த சிவலிங்கத்தின் பெரிய பகுதி சிவபெருமானையும் சிறியபகுதி பார்வதியையும் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு சிவலிங்கப்பகுதிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியானது பருவத்திற்கு ஏற்றாற்போல் நீண்டும் குறுகியும் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
புராணக்கதைகளின்படி விஷ்ணுவும் பிரம்மாவும் யார் இருவரில் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொண்டதாகவும், சிவபெருமான் ஒரு நெருப்புத்தூண் ரூபத்தில் அவர்களது சண்டையை நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த நெருப்புத்தூண்தான் இந்த கோயில் ஸ்தலத்தில் சிவலிங்கமாக இடம் பெற்றுள்ளது என்று அந்த புராணக்கதை கூறுகிறது.



Click it and Unblock the Notifications