15 ஏக்கர் பரப்பளவில் பரந்து அமைந்திருக்கும் இந்த தாராகர் அரண்மனை காங்க்ராவில் உள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. சுற்றிலும் பசுமையான தேயிலைத்தோட்டங்கள் சூழ்ந்திருக்க கன்னிமை மாறாத இயற்கை எழில்சூழலின் மத்தியில் இந்த அரண்மனை வளாகம் வீற்றுள்ளது. அரைவட்ட நிலா என்ற பொருள் தரும் ‘அகிலா’ என்ற பெயரில் இந்த அரண்மனை வரலாற்றுக்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கோடை வசிப்பிட மாளிகையாக கட்டப்பட்ட இந்த அரண்மனை ஜம்மு காஷ்மீர் அரச குடும்பத்தாருக்கு பின்னாளில் சொந்தமாகியிருக்கிறது. தௌலாதார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த அரண்மனை தற்போது ஒரு பாரம்பரிய விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
1930ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பாரம்பரிய விடுதியில் பழமையான கலையம்சங்களும் நவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளன. தேக்கு மரச்சட்டங்களால் வடிவமைக்கப்பட்ட உணவுக்கூடம், காலனிய கால இருக்கைகள், பிரம்மாண்டமான முகப்புகள் ஆகியவற்றுடன் இந்த அரண்மனை விடுதி காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications