கான்பூர் சங்ராஹாலயா அல்லது கான்பூர் அருங்காட்சியகம், கான்பூரின் அலுவல் ரீதியிலான அருங்காட்சியகமாகும். முதல் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற இந்த நகர மக்களைப் பற்றிய எண்ணற்ற காட்சிப் பொருட்கள், நினைவுப் பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை கெண்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கிருக்கும் வரலாற்றுப் பொருட்களில் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த ஆர்டில்லரி பீரங்கி மிகவும் புகழ் பெற்றதாகும்.
கான்பூரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி உண்மையான பல தகவல்களை கொண்டிருக்கும் இடமாகவே இந்த அருங்காட்சியகம் விளங்கி வருகிறது. 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், கான்பூர்-லக்னோ சாலையில் குறுக்காக உள்ள மால் சாலையில் உள்ள பூல் சிங் பூங்காவின் மைதானத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications