நானா ராவ் பூங்கா, கம்பெனி பூங்கா என்றும் அழைக்கப் படுகிறது. 1857-ம் ஆண்டில் நடந்த முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, சுமார் 200 ஆங்கிலேய பெண்கள் மற்றும் குழந்தைகளை நானா சாஹிப்பின் தலைமையிலான போராட்டக்காரர்கள் படுகொலை செய்த இடமான இந்த பூங்கா ஆங்கிலேயர்கள் காலத்தில் 'மெமோரியல் வெல்' என்று அழைக்கப்பட்டு வந்து.
இந்த படுகொலைகள் நடந்த கட்டிடம் பிபிகார் என்பதாகும். இதற்கு அருகிலுள்ள கிணற்றில் தான் இறந்தவர்களின் உடல்கள் தூக்கி வீசப்பட்டன. எனவே, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்த பூங்கா விளங்குகிறது.
இந்த கிணற்றுக்கு அருகிலுள்ள இடத்தை இந்தியர்களை தண்டிப்பதற்கான இடமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி வந்தார்கள். மேலும், அவர்கள் கான்பூர் மக்களிடம் சுமார் 30,000 பவுண்டுகள் பணத்தை கட்டாய வசூல் செய்து இந்த நினைவு கட்டிடத்தைக் கட்டினார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய அரசாங்கம் ஆங்கிலேய நினைவு இல்லத்தை மூடிவிட்டது. 1857 போராட்டத்தில் பங்கு பெற்ற மாபெரும் தலைவர்களான தாந்தியா தோபே, அஜிஸான் பாய் மற்றும் ஜான்ஸி ராணி ஆகியோரின் சிலைகள் இந்த பூங்காவில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications