கர்கலாவில் உள்ள பாஹுபலி சிலை 1432-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதை பாஹுபலியின் நினைவாக பாண்டிய மன்னன் வீரபாண்டிய பைரவன் என்பவன் கட்டினான்.
பாஹுபலியும் அவருடைய அண்ணன் பரதனும் ஆட்சிக்காக போர் செய்தனர் என்று புராணம் கூறுகிறது. இந்த போரில் பாஹுபலி வென்றாலும், போரின் கொடுமைகளை பார்த்து மனம் கசிந்து தன் அண்ணன் பரதனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு திகம்பர ஜைனத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.
பின்பு, பாஹுபலி தான் செய்த பாவத்துக்கு பரிகாரமாக முக்தி அடையும் காலம் வரை நிர்வாணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. பாஹுபலி சிலை ஜைனர்களால் தியாகச் சின்னமாகவும், தன்னலமற்றதின் சின்னமாகவும் போற்றப்படுகிறது.
கர்கலாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேகா விழாவுக்கு உலகம் முழுவதிமிருந்து ஜைனத் துறவிகளும், பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது பாஹுபலி சிலைக்கு நீராலும், பாலாலும் அபிஷேகம் செய்யப்படும்.



Click it and Unblock the Notifications