Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்னாலா » ஈர்க்கும் இடங்கள் » கர்னாலா கோட்டை

கர்னாலா கோட்டை, கர்னாலா

13

ராய்காட் மாவட்டதிலுள்ள கர்னாலா நகரத்தின் விசேஷமான சுற்றுலா அம்சம் இந்த கர்னாலா கோட்டை ஆகும். இது ஃபுனல் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது கர்னாலா பறவைகள் சரணாலயத்தின் வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளது.இந்த கோட்டை ஒன்றை விட ஒன்று பெரியதான இரண்டு கோட்டைகளை கொண்டுள்ளது.

இவற்றில் உயரமான கோட்டை வளாகத்தில் 125 அடி உயரமுள்ள ஒரு காவல் கோபுரம் இடம் பெற்றுள்ளது. இது தூரத்தில் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க பயன்பட்டிருக்கிறது. எனினும் இந்த கோபுரம் தற்போது இடிபாடடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கோட்டையில் ஒரு பெர்ஷிய மற்றும் மராத்திய மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பு உள்ளது. மராத்தி எழுத்துக்கள் படிக்க முடியாத நிலையில் தேதி இல்லாமலும், பெர்ஷிய கல்வெட்டில் ‘சையத் நூருதீன் முஹம்மத் கான், ஹிஜ்ரி, 1147 AH (1735 CE) ’ என்ற குறிப்பும் காணப்படுகிறது. இது முகலாய காலத்தை சேர்ந்த கல்வெட்டாக அறியப்படுகிறது.

இந்த கோட்டை ஒரு நீர்த்தொட்டியையும் கொண்டுள்ளது. இவை தவிர, இந்த கோட்டையின் உச்சியிலிருந்து பார்க்கும்போது தூரத்தில் அமைந்துள்ள ராஜ்மச்சி கோட்டை மற்றும் பிரபால்காட் கோட்டை ஆகியன அழகாக காட்சியளிக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed