Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்வார் » ஈர்க்கும் இடங்கள் » தேவ்பாக் கடற்கரை

தேவ்பாக் கடற்கரை, கார்வார்

49

கார்வார் பகுதியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த தேவ்பாக் கடற்கரையும் ஒன்றாகும். கார்வார் கடற்கரையிலிருந்து இது 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தேவ்பாக் எனும் அருகாமைத்தீவில் இருப்பதால் இந்த கடற்கரைக்கு செல்வதற்கு கார்வாரிலிருந்து மோட்டார் படகில் (ஃபெர்ரி) செல்லவேண்டும். இந்த ஸ்தலம் இங்குள்ள ‘ஜங்கிள் லாட்ஜஸ்’ எனும் ரிசார்ட்டுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.

 

உத்தர கன்னட மாவட்டத்தின் மற்ற கடற்கரைகளை போல் அல்லாது இது ஜன சந்தடி மற்றும் இரைச்சல் இன்றி தூய்மையாகக் காட்சியளிப்பதால் இது குடும்பத்துடன் வரும் பயணிகள், தேனிலவு தம்பதிகள், சாகசவிரும்பிகள் போன்றோர் விரும்பும் ஸ்தலமாக இருக்கிறது.

நீர் மூழ்கு விளையாட்டு, பாராசூட் சறுக்கு, படகுச்சவாரி, மோட்டார் சொகுசுப்படகுப்பயணம், ஆழ்கடல் நீச்சல் போன்ற பல வகையான நீர் விளையாட்டுகளும் பொழுது போக்கு அம்சங்களும் இங்கு நிறைந்துள்ளன.

சுற்றுலாப்பயணிகள் இங்கு அருகிலுள்ள தீவுகளையும் மீனவக்கிராமங்களையும் சுற்றிப்பார்ப்பதற்கு வசதியாக மீன்பிடி படகுகளில் படகுப்பயணங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஸ்தலத்துக்கு அருகிலுள்ள குரும்காட் தீவுப்பகுதியில் உள்ள மலைகளில் மலையேற்ற சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.

தேவ்பாக் கடற்கரைக்கு வரும் பயணிகள் அருகாமையிலுள்ள சதாசிவகாட் கோட்டை, வெங்கட்ரமணா கோயில் மற்றும் நாகநாத  கோயில் போன்ற இதர ஸ்தலங்களுக்கும் செல்லும் வகையில் இந்த தேவ்பாக் கடற்கரை அமைந்துள்ளது.

தேவ்பாக் கடற்கரைக்கு விஜயம் செய்ய உகந்த காலம் அக்டோபர் முதல் மார்ச்சுக்கு இடைப்பட்ட காலம் ஆகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri