Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்வார் » ஈர்க்கும் இடங்கள் » கார்வார் கடற்கரை

கார்வார் கடற்கரை, கார்வார்

49

கார்வார் கடற்கரை கர்நாடகாவின் மிகச்சிறப்பான கடற்கரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு புறம் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சூழ்ந்திருக்க அமைந்துள்ளது.

அமைதியான அற்புதமான கடற்கரையை தேடும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு இது மிக பொருத்தமான இடமாகும். பயணிகள் சூரியக்குளியல் (வெயில் காய்தல்) மீன் பிடித்தல் மற்றும் இதர நீர் விளையாட்டு பொழுதுபோக்குகளில் இங்கு ஈடுபடலாம்.இங்கு வரும் பயணிகளுக்கு உள்ளூர் உணவை சுவைக்கும் அனுபவத்தை தரும் வகையில் இங்கு உணவகங்கள் உள்ளன. தேங்காய் சேர்த்து செய்யப்பட்ட காரமான கடல் உணவு வகைகள் இங்கு பயணிகள் மத்தியில்  பிரசித்தம்.

கார்வார் கடற்கரைக்கு வர விரும்பும் பயணிகள் வருடத்தின் எந்த நாளிலும் இங்கு வரலாம்.இருப்பினும் செப்டம்பரிலிருந்து மே மாதத்திற்கு இடைப்பட்ட காலம் மிக உகந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குரும்காட் தீவு, பீர் ஷான் ஷம்சுதீன் கரோபட் தர்க்கா, தேவ்பாக், சதாஷிவ்காட் மலைக்கோட்டை  மற்றும் நாகநாத கோயில் போன்றவை இங்கு கார்வார் கடற்கரைக்கு அருகிலுள்ள மற்ற பிரசித்தமான இடங்களாகும். 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri