காசர்கோட் மாவட்டத்தில் உள்ள ஹோஸ்துர்க் நகரில் அமைந்துள்ள மடியன் கூலோம் கோயில் வீரத்தின் பெண் தெய்வமான பத்ரகாளி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோயில் ஹோஸ்துர்க் தாலுக்காவின் கஞ்சன்காட் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
மடியன் கூலோம் கோயிலில் முதன்மை தெய்வமான பத்ரகாளியை தவிர பக்தர்கள் பகவதி, க்ஷேத்ரபாலன் மற்றும் பைரவன் போன்ற தெய்வங்களையும் வழிபடுகின்றனர். இங்கு மதிய வேளையில் பிராமண அர்ச்சகர் ஒருவர் பூஜை நடத்த,காலை மற்றும் மாலை வேளைகளில் மனியாணி எனும் ஹிந்து மதத்தை சேர்ந்த வேறொரு வகுப்பை சேர்ந்தவர்கள் பூஜை நடத்துவார்கள்.
மடியன் கூலோம் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடத்தப்படும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில், 'பூதம்' என்ற பாரம்பரிய நடனம் பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.



Click it and Unblock the Notifications