ஐர்வான் கிராமத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலான ஐர்வான் கோவில் கத்துவா நகரில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. உஜ்ஜெயின் அரசரான விக்ரமாதித்தியர் 4ஆம் நூற்றாண்டில் இக்கோவிலை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.
இங்கு ஓடும் ரவி நதியின் பெயரால் இக்கோவில் ஐர்வான் என வழங்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் வழிபாட்டுக்கு முன்பு இங்கிருக்கும் ஏராளமான ஊற்றுகளில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இறந்தவர்களின் அஸ்தியை ஹரித்வார் நகரத்திற்குச் சென்று கங்கையில் கரைக்க வழி இல்லாதவர்கள் இங்கிருக்கும் குப்த் கங்கையில் அதைச் செய்யலாம். பைசாகி மற்றும் சிவராத்திரி சமயங்களில் இக்கோவில் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.



Click it and Unblock the Notifications