சீக்கியர்களின் மத வழிபாட்டுத்தலமான குருத்வரா சிங் சபா கத்துவா நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. குருத்வரா சவுக் என்றும் அழைக்கப்படும் இவ்விடத்தின் உள்ளே குருத்வரா பர்பந்தக் கமிட்டியின் அலுவலகம் அமைந்திருக்கிறது.
குருத்வராவின் அருகிலேயே சீக்கிய கல்லூரி ஒன்றும் இருக்கிறது. இங்கே சீக்கிய திருவிழாக்களான குருபுரப் மற்றும் பிரகாஷ் உத்சவ் ஆகியவை சீரும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. நகர் கிர்த்தான் மற்றும் கார் திருவிழா ஆகியவை இங்கு கொண்டாடப்படும் மற்ற விழாக்களாகும்.



Click it and Unblock the Notifications