கத்துவா மாவட்டத்தில் இருந்து 13கிமீ தொலைவில் இருக்கும் பரோல் கிராமத்தில் அமைந்திருக்கிறது மாதா பால சுந்தரி கோவில். பாலா ஜீ சுந்தரி எனவும் வழங்கப்படும் இக்கோவிலைச் சுற்றி ஏராளமான மாம்பழ மரங்கள் அமைந்திருக்கின்றன.
புகழ்பெற்ற ஒரு புராணத்தின்படி ஒரு பிராமணன் இந்தப் பகுதியில் புல் வெட்டிக்கொண்டிருக்கும் போது ஒரு கல் தட்டுப்பட்டதாகவும், அந்த கல்லில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அந்த பிராமணனின் கனவில் அம்மன் தோன்றியதாகவும் அந்தக் கல்லை ஒரு ஆலமரத்தின் அடியில் வைக்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் அம்மனின் மறுபிறப்பாக கருதப்பட்ட அந்தக் கல் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. நவராத்திரி விழாவின் போது இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.



Click it and Unblock the Notifications