Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஸிரங்கா » ஈர்க்கும் இடங்கள் » அகதோஷியா புகுரி

அகதோஷியா புகுரி, காஸிரங்கா

24

தோல்பூருக்கு அருகில் உள்ள கச்சுவா கிராமத்தில் இந்த பெரிய குளம் அமைந்துள்ளது (அஸ்ஸாமிய மொழியில் புகுரி என்றால் குளம் என்று அர்த்தம்). இந்த குளத்திற்கு அருகில் வசித்து வந்த புனிதமான பிராமண குருவான அகதோஷி என்பவரின் பெயராலேய இந்த குளம் அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

தெய்வீக சக்திகள் நிரம்பியவராக இந்த குரு இருந்ததால், அவர் உள்ளூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலும் பிரபலமானவராக இருந்திருக்கிறார். இன்றும் கூட இந்த குளத்திற்கு அருகில் பிரார்த்தனை செய்தால் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.

எனவே, கச்சுவா மற்றும் அருகிலுள்ள பிற கிராமத்தினருக்கு இந்த குளம் புனிதமான இடமாக உள்ளது. இதன் காரணமாகவே அகதோஷியா புகுரி இப்பகுதிக்கு வரும் மக்களிடம் புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது.

இந்த இடத்திற்கு சிலர் தங்களுடைய உள்ளத்தை செலுத்தி பிரார்த்தனை செய்யவும், வேறு சிலர் இந்த குளத்தைக் காணவும், மற்றும் சிலர் சுற்றியுள்ள மக்களின் கலாச்சாரத்தை அறிந்திடவும் இந்த பகுதிக்கு வருகை தருகிறார்கள்.

இந்த கிராமத்தின் காட்சிகள், ஒரு உண்மையான அஸ்ஸாமிய கிராமத்தின் நடவடிக்கைகளை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் என்பது உறுதி!

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
04 Apr,Sat
Check Out
05 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun