Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» கீழ்பெரும்பள்ளம்

கீழ்பெரும்பள்ளம் - கேதுவின் நவக்கிரக கோவில்

6

தமிழகத்தின் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள அழகான சிறிய கிராமமே கீழ்பெரும்பள்ளம். இது திருவேற்காட்டின் அருகே இருக்கிறது. இங்கே அமைந்திருக்கும் புகழ்பெற்ற கீழ்பெரும்பள்ளம் கோவில் அதிக அளவில் பக்தர்கள் மற்றும் பயணிகளை ஈர்த்து வருகிறது.

இந்தியாவின் வளமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்க விரும்பும் வேற்று நாட்டு சுற்றுலாப் பயணிகள் இடையே இக்கிராமம் புகழ்வாய்ந்தது ஆகும். இக்கிராம மக்களின் அன்றாட வேலைகளாகிய பால் கரத்தல் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் பங்குபெறுவதற்காக நீண்ட நாட்கள் இங்கு தங்கி இருக்க பல பயணிகள் விரும்புகிறார்கள்.

கேது தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலே கீழ்பெரும்பள்ளத்தின் முக்கிய ஈர்ப்பு ஆகும். கேது கிரகத்தை வழிபடவும், அந்த கிரகத்தினால் ஏற்படக்கூடிய தீய காரியங்களுக்கு பரிகாரம் செய்யவும் திரளான மக்கள் இங்கே கூடுகின்றார்கள்.

கீழ்பெரும்பள்ளத்தின் அருகே இருக்கும் மற்றும் ஒரு புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலம் பூம்புகார் கடற்கரை. ஒன்பது நவக்கிரக கோவில்களில் ஒன்றான கீழ்பெரும்பள்ளத்தின் அருகே 8 நவக்கிரக ஸ்தலங்களும் இருக்கின்றன.

அவை திருநல்லார் (சனி அல்லது சனீஸ்வரர்), கஞ்சனூர் (வெள்ளி அல்லது சுக்ர தேவன்), திருவேங்கடு (புதன் அல்லது புதனீஸ்வரர்), சூரியனார் கோவில் (சூரியன் அல்லது சூரிய தேவன்), திங்களூர் (நிலா அல்லது சந்திர தேவன்), ஆலங்குடி (குரு அல்லது வியாழன்), வைதீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருநாகேஷ்வரம் (பாம்பு கிரகமாகிய ராகு) ஆகியவை.

கீழ்பெரும்பள்ளம் கிராமத்தில் ரயில் நிலையமோ விமான நிலையமோ இல்லை, ஆனால் அரசாங்கத்தால் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் சாலை வழியாக எளிதில் இவ்விடத்திற்கு பயணம் செய்யலாம்.

இந்த கிராமத்திற்கு குளிர் சாதனம் அல்லது சொகுசு பேருந்து வசதி இல்லை என்றாலும், இக்கிராமத்திற்கு சென்று வர தினந்தோறும் பேருந்து சேவையை அரசாங்கம் இயக்கி வருகின்றது. குளிர்காலத்தில் இங்கே வானிலை இனிமையாக இருப்பதால் குளிர்க்காலத்தில் திரளான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள்.

கீழ்பெரும்பள்ளம் சிறப்பு

கீழ்பெரும்பள்ளம் வானிலை

சிறந்த காலநிலை கீழ்பெரும்பள்ளம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கீழ்பெரும்பள்ளம்

  • சாலை வழியாக
    கும்பகோணத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவில் இருக்கும் கீழ்பெரும்பள்ளம் கிராமம் சாலை மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. கும்பகோணத்தில் இருந்து தொடர்ச்சியாக இந்த கிராமத்திற்கு சீரான இடைவெளியில் பேருந்துகள் புறப்படுகின்றன. பேருந்து கட்டணம் சாதாரணமாகவும், பயணம் சௌகரியமாகவும் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து இந்த கிராமத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்துவிடலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கீழ்பெரும்பள்ளத்திற்கு நெருக்கமான ரயில் நிலையம் கும்பகோணத்தில் 63 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சென்னை, ராமேஸ்வரம், மதுரை, திருப்பதி மற்றும் குயிலானோடு கும்பகோணம் ரயில் நிலையம் நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்வண்டி நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் சென்று, அங்கு இருந்து பேருந்து மூலமாக கீழ்பெரும்பள்ளத்திற்கு செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கீழ்பெரும்பள்ளத்தில் விமான நிலையம் எதுவும் இல்லை. இங்கு இருந்து 151 கி.மீ. தொலைவில் இருக்கும் திருச்சி விமான நிலையமே இதற்கு நெருக்கமான விமான தளம். திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் மாத்திரமே உள்ளன. எனினும் சென்னை சர்வதேச விமானநிலையத்தோடு, திருச்சி விமானநிலையம் நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து வாடகை கார்கள் மூலமாக ஒருவர் கீழ்பெரும்பள்ளத்தை சுலபமாக அடைந்திடலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue