கெம்மனகுண்டியில் மலைகளாலும், அழகிய பள்ளத்தாக்குகளாலும் சூழ அமைந்திருக்கும் சாந்தி அருவியின் கவின்மிகு காட்சி காண்போர் கண்களை விட்டு அவ்வளவு விரைவில் விலகாது.
இதன் அருகில் உள்ள கிறங்கடிக்கும் ஷோலா புல்வெளியும், இசட் முனையும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். இசட் முனை செங்குத்தான குன்றின் உச்சியில் இருப்பதால் இங்கிருந்து நீங்கள் சாந்தி அருவியின் மாசில்லாத அழகை எந்த தடையுமில்லாமல் ரசிக்கலாம்.அதோடு கெம்மனகுண்டி வரும் பயணிகள் நேரமிருந்தால் முல்லயனாகிரி மற்றும் பத்ரா புலிகள் காப்பகம் போன்ற இடங்களுக்கும் சென்று பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications