முகப்பு » சேரும் இடங்கள் » கஜுராஹோ » வானிலை

கஜுராஹோ வானிலை

கஜுராஹோ பகுதிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள அக்டோபர் மற்றும் மார்ச் வரையிலான மாதங்கள் ஏற்றதாக உள்ளன. இக்காலத்தில் பருவநிலை இதமான சூழலுடன் காணப்படுகிறது. மேலும் உலகப்பிரசித்தி பெற்றுள்ள கஜுராஹோ நடனத்திருவிழாவும் குளிர்காலத்தில்தான் நடைபெறுகிறது. எனவே இந்த வரலாற்றுத்தலத்துக்கு விஜயம் செய்ய குளிர்காலமே மிகவும் உகந்ததாக உள்ளது.

கோடைகாலம்

கஜுராஹோ பகுதியில் கோடைக்காலம் மிகக்கடுமையாக காணப்படுகிறது. ஏப்ரல் தொடங்கி ஜுன் வரை நீடிக்கும் கோடையின் உச்சத்தில் 47°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. அதிக வெப்பநிலையும் வறட்சியும் இக்காலத்தில் நிலவும் என்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு அசௌகரியம் அதிகமாகவே இருக்கும். எனவே  கஜுராஹோ சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள கோடைக்காலம் உகந்ததல்ல.

மழைக்காலம்

மழைக்காலம் கஜுராஹோ பகுதியின் வெப்பத்தை பெருமளவில் தணித்து இப்பகுதிகளின் பாறைகளை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஈரமாக காட்சியளிக்க வைக்கிறது. ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு கடுமையான மழைப்பொழிவு நிலவுகிறது. அத்துடன் ஈரப்பதமும் அதிகமாகவே இருக்கும்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரை கஜுராஹோ பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் இங்கு பகல் பொழுது மித வெப்பத்துடனும் இரவு மிகக்குளிருடனும் காணப்படும். மிகக்குறைந்த வெப்பநிலை இரவு நேரங்களில் 4°C அளவிலும் பகலில் அதிகபட்சம் முதல்  32°C  வரையிலும் வெப்பநிலை இருக்கும்.