உயரமான மரங்களுடன் பிரம்மாண்டமாக காணப்படும் ரைவுட் பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா லோனாவலாவுக்கும் கண்டாலாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த பூங்காவின் பெயர்க்காரணம் சற்றே சிக்கலாக உள்ளது.
ரை என்ற ஆங்கிலேய அதிகாரியின் பெயரில் இங்குள்ள மரங்கள் அழைக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாக ஒரு சாராரும், மராத்தி மொழியில் ரை என்பதற்கு அடர்ந்த கானகம் என்று பொருள் உண்டு என்பதாக மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.
பல ஆண்டுகள் வயதான பெரிய மரங்கள் இந்த பூங்காவில் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் தாவரவியல் தோட்டமாக இருந்த இது பின்னாளில் பூங்கா வடிவமாக மாற்றப்பட்டுள்ளது.இந்த பூங்காவில் ஒரு மஹாதேவ் கோயிலும் உள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடி மகிழ ஏராளமான இடம் உள்ளது.



Click it and Unblock the Notifications