கண்டாலா மலைவாசஸ்தத்தில் உள்ள மற்றொரு அற்புதமான மலைக்காட்சி தளம் இந்த டைகர்’ஸ் லீப் பாயிண்ட் என்று அழைக்கப்படும் ‘புலிப்பாய்ச்சல் மலைக்காட்சிதளமாகும்’.
இங்கிருந்து பள்ளத்தாக்கு பகுதியை உற்றுப்பார்த்தால் ஒரு புலி பாய்வதைப்போன்ற காட்சி தெரிவதால் இதற்கு இப்படி ஒரு பெயர் வந்துள்ளது. பயணிகள் இந்த ஸ்தலத்திலிருந்து இயற்கைக்காட்சிகளை பாதுகாப்புடன் ரசிப்பதற்காக பிரத்யேக மேடை அமைப்பு இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு கல்லை இங்குள்ள பள்ளத்தாக்கை நோக்கி வீசி எறிந்தால் அது இங்குமங்கும் பட்டு ஆழத்தை நோக்கி பயணிக்கும் காட்சியை காணலாம்.



Click it and Unblock the Notifications