கந்த்வாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது தாதா தர்பார். இது ஒரு புண்ணியத் தளமாகக் கருதப்படுகிறது. சுவாமி கேஷ்வாநந்தாஜி மகராஜ் மற்றும் சுவாமி ஹரிஹரநந்தாஜி மஹராஜ் அவர்களி கல்லரைகள் இங்கு உள்ளன.
இவர்களை முறையாக, பரே தாதாஜி, சோட்டே தாதாஜி என்று அழைப்பர். 1930 ஆம் ஆண்டு, இத்துறவிகளுக்கு இங்கு கல்லரைகளுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
பரே தாதாஜி, பல்வேறு இடங்களுக்கு யாத்திரை செய்து, துனி என்னும் நெருப்பின் முன் நின்று தியானம் செய்வார். ஆகையால் இவரை தாதா துனிவாலா என்றும் அழைப்பர். இந்தப் புண்ணிய இடத்திற்கு தாதா துனிவாலா தர்பார் என்றும் பெயர் உண்டு.
புனித நாளான குரு பூர்ணிமா தினத்தன்று வருடாந்திர திருவிழா இங்கு நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்தத் திருவிழாவைக் காண வருகின்றனர்.
ரயில் நிலையத்திலிருந்து சுமார் 67 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் தாதா தர்பார், நாம் எளிதில் செல்லக் கூடிய இடம். பேருந்து நிலைத்தின் அருகில் அமைந்திருப்பதால், பேருந்தின் மூலமாக வருபவர்களும் சிரமமின்றி தாதா தர்பாரை அடையலாம்.



Click it and Unblock the Notifications