Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொடலா » வானிலை

கொடலா வானிலை

வருடத்தின் எந்த ஒரு நாளிலும் விஜயம் செய்ய ஏற்ற பருவநிலையை கொடலா சுற்றுலாத்தலம் கொண்டிருந்தாலும் கோடைக்காலத்தில் சற்றே உஷ்ணம் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. மழைக்காலத்திற்கு பிந்தைய காலமும் குளிர் காலமும் இங்கு விஜயம் செய்வதற்கு ஏற்ற காலமாக உள்ளது.

கோடைகாலம்

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீடிக்கும் கோடைக்காலத்தில் கொடலா பகுதி பொதுவாக உஷ்ணத்துடனும் வறட்சியான சூழலுடனும்  காணப்படுகிறது.  கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக  32°C வரை உள்ளது.

மழைக்காலம்

கொடலா பகுதியில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் விதத்தில் மழைக்காலம் வருகை தருகிறது. தொடர்ச்சியில்லாமல் விட்டுவிட்டு மழைப்பொழிவை கொடலா பெறுகிறது. மழையை விரும்பக்கூடிய பயணிகள் இக்காலத்தில் கொடலாவுக்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

கொடலா பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இனிமையான குளிர்காலம் நிலவுகிறது. இக்குளிர்காலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக  16°C  வரை குறைந்து காணப்படுகிறது. சுற்றுலா மேற்கொள்வதற்கான ஏற்ற இதமான சூழல் இக்காலத்தில் நிலவுகிறது.