சாகச பயணிகளுக்காகவே அமைந்துள்ள ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த மலையேற்றமாகும். அற்புதமான பருவநிலை மற்றும் பசுமையான இயற்கைச்சூழலைக் கொண்டுள்ள குளிர்காலம் மலையேற்றத்துக்கு உகந்த காலமாகும்.
பௌர்ணமி இரவில் இயற்கை வெளிச்சத்தில் இங்குள்ள மலைச்சிகரத்தினை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபடுவது ஒரு அதிசாகச துணிகர பொழுதுபோக்காக கருதப்படுகிறது.
சம்பேகட்டே கிராமத்திலுள்ள ஜீப் பாதை வழியாக பயணித்து இந்த மலையேற்றப்பாதையை அடையலாம். சிகரத்தின் உச்சியிலிருந்து மலையேறிகள் அருமையான சூரிய அஸ்தமன காட்சியையும் அரபிக்கடலின் அழகையும் தரிசித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications