தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது.
இந்த தூண்கள் 400 மீட்டர் உயரத்தில் உள்ளன. இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். இந்த தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது.
எனவே இதுவும் மிக ஆபத்தான இடமாக கருதப்படுகிறது. தூண்பாறை தமிழ்நாடு வன இலாக்கா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மேலும் இந்த தூண்பாறையின் சிறப்புக்கு முக்கிய காரணமாக திகழ்வது இங்கேதான் கமல்ஹாசனின் குணா திரைப்படம் படம்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தப் பாறை 'குணா பாறை' என்று பிரபலமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications