Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொடுங்கல்லூர் » ஈர்க்கும் இடங்கள் » திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில்

திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில், கொடுங்கல்லூர்

21

திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில் திரிப்பிரயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கொடுங்கல்லூர் பகுதியிலுள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றாகும்.

கொடுங்கல்லூரிலிருந்து 26 கி.மீ தூரத்திலுள்ள திரிப்பிரயார் என்னும் சிறு நகரத்தில் இந்த கோயில் உள்ளது. மஹாவிஷ்ணுவின் 7 வது அவதாரமான ராமபிரான் இந்த கோயிலில் வழிபடப்படுகின்றார்.

பலவிதமான கதைகள் இந்த அழகிய கோயிலைப்பற்றி சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒன்று இந்த கோயிலின் விக்கிரகமானது உள்ளூர் தளபதி ஒருவரால் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது என்பதாகும்.

மேலும், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்ற மூன்று கடவுளர்களின் அம்சங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால் இந்த கோயிலின் விக்கிரகம் திரிமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் கொண்டாடப்படும் ஆராட்டுப்புழா பூரம் எனும் கோலாகலமான திருவிழாவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. கருவறை, ராமாயண காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள நமஸ்கார மண்டபம், நவக்கிரகங்களை குறிக்கும் மரச்சிற்பவடிப்புகள் மற்றும் புராதன சுவரோவியங்கள் போன்றவற்றை இந்தக்கோயிலில் காணலாம். கூத்து போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இந்த திரிப்பிரயார் ஷீ ராமர் கோயிலில் அடிக்கடி நிகழ்த்தப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed