ஷாகு அருங்காட்சியகம் முன்னர் சத்ரபதி ஷாகு மஹாராஜாவின் ராஜ வம்சத்தினர் வாழ்ந்த அரண்மனையாக இருந்தது. புதிய அரண்மனையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு ஆங்கிலேய மற்றும் இந்து கட்டிடக்கலை வடிவமைப்பு இரண்டும் கலந்த அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.கோலாப்பூரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் கோலாப்பூர் அரசர்களின் வாழ்க்கை மற்றும் ஆட்சிமுறை குறித்த வரலாறு பதிக்கப்பட்டுள்ளது. வழுவழுப்பான கருங்கற்களில் வரலாற்று சம்பவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் கண்ணாடிகளில் பொறிக்கப்பட்டுள்ள ஓவியங்களில் ஷாகு வம்ச மஹாராஜாக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளன.தற்சமயம் இந்த அருங்காட்சியகம் ஷாகு மஹாராஜ் வம்சாவழி வாரிசான ஷீமந்த் ஷாகு மஹாராஜ் அவர்களின் உரிமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை சுற்றிலும் நன்கு பராமரிக்கப்பட்ட பூந்தோட்டமும் ஏரியும் மற்றும் ஒரு வனவிலங்கு காட்சியகமும் உள்ளது.



Click it and Unblock the Notifications