ராணா சாப் மன்னரால் கட்டப்பட்ட இந்த கோட்காயீ அரண்மனை கோட்காயீ நகரின் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். பழமையான இந்த அரண்மனை ஒரு மலைச்சிகரத்தின் உச்சியில் வீற்றுள்ளது.
இந்த அரண்மனையிலிருந்து மலையடிவாரத்தில் ஓடும் கிரி கங்கா ஆற்றின் அழகை நன்றாக பார்த்து ரசிக்க முடியும். உள்ளூர் மக்கள் இந்த அரண்மனையை பஸ்ஸா என்று அழைக்கின்றனர்.
திபெத்திய பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை பகோடா கோயில் போன்ற கூரை அமைப்புடன் காட்சியளிக்கிறது. மேடைபோன்ற பீட அமைப்பின் மீது மரக்கட்டுமான அமைப்பாக இது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
அக்காலத்திய பூர்வகுடி கலைஞர்களின் கைவினைத்திறனுக்கு ஒரு உன்னதமான எடுத்துக்காட்டாக இந்த அரண்மனை ஒளிர்கிறது.



Click it and Unblock the Notifications