கொட்டாரக்கராவின் முதல் அரண்மனையாக 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கொட்டாரக்கரா அரண்மனை பிரபலமாக அறியப்படுகிறது. இந்த அரண்மனையை தவிர கொட்டாரக்கரா நகரில் ஏழு அரண்மனைகளின் சிதைவுகளையும் பயணிகள் இங்கு சுற்றுலா வரும் போது பார்க்கலாம். இதன் காரணமாகவே கொட்டாரக்கரா நகரம் அரண்மனைகளின் பூமி என்று அழைக்கப்படுகிறது.
கொட்டாரக்கரா நகரை பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்த திரிவிதாங்கூர் மகாராஜாக்களின் வசிப்பிடமாக இந்த கொட்டாரக்கரா அரண்மனை இருந்து வந்தது. கொட்டாரக்கரா அரண்மனை தற்போது பைத்ருக கலா கேந்திரமாக செயல்பட்டு வருவதோடு, இதை திரிவிதாங்கூர் தேவாசம் போர்ட் நிர்வகித்து வருகிறது.



Click it and Unblock the Notifications