Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொட்டாரக்கரா » ஈர்க்கும் இடங்கள் » பத்தனபுரம்

பத்தனபுரம், கொட்டாரக்கரா

12

கொல்லம் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களின் ஊடே அமைந்திருக்கும் பத்தனபுரம் நகரம், யானைகள் கூட்டம் அதிகமாக காணப்படும் அடர் வனங்களுக்காக மிகவும் புகழ் பெற்றது.

இதன் காரணமாகவே இந்த நகரம் 'பத்து யானைகளின் பூமி' என்ற பொருளில் பத்தனபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது புனலூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் சாலை மூலமாக எளிதில் அடைந்து விட முடியும்.

பத்தனபுரம் நகரம் ஏராளமான குடிசைகள் மற்றும் செங்கல் தயாரிப்பு, பால் விற்பனை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை உள்ளடக்கிய சிறு தொழிற்சாலைகள் ஆகியவை நிறைந்திருக்க பிரபலமான வர்த்தக மையமாக திகழ்ந்து வருகிறது. அதோடு இந்த நகரம் ரப்பர் தோட்டங்கள் பயிரிடுவதிலும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

பத்தனபுரம் நகரம் கல்லடா நதிக்கருகில் அமைந்திருப்பதோடு இந்த நகரின் தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள் ஆகியவற்றில் நடைபெறும் திருவிழாக்கள் பத்தனபுரம் நகருக்கு வேறொரு வித்தியாசமான அடையாளத்தை கொடுக்கிறது.

இவைதவிர பத்தனபுரம் நகரின் எல்லையில் அமைந்திருக்கும் பெரியார் தேசிய பூங்கா பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. மேலும் வழப்பாரா அருவி, புனலூர் தொங்கு பாலம், கல்லடா நதி, அஞ்சுமலப்பாறை ஆகிய இடங்களும் நீங்கள் பத்தனபுரம் நகருக்கு வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu