கேரளாவின் ஜனக்கூட்டம் மிகுந்த யாத்ரீக மையமாக அறியப்படும் கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொல்லம் மாவட்ட மத்தியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
இந்தக் கோயில் அதன் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளைடைவில் இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியின் புகழ் காரணமாக விநாயகர் கோயில் கோயில் என்ற அளவிலே பிரபலமாக தொடங்கியது.
இங்கு சிவன், விநாயகரை தவிர பார்வதி, முருகன் மற்றும் ஐயப்பாவின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆயில்யம்-மகம் போன்ற தருணங்களில் நடைபெறும் திருவிழாக்களில் தென்னிந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்தக் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் உன்னி அப்பம் கேரள மாநிலம் முழுவதும் வெகுப்பிரபலம்.



Click it and Unblock the Notifications