கோட்டயம் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Kottayam, India 24 ℃ Mist
காற்று: 0 from the N ஈரப்பதம்: 89% அழுத்தம்: 1012 mb மேகமூட்டம்: 75%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Thursday 14 Dec 23 ℃ 74 ℉ 33 ℃91 ℉
Friday 15 Dec 24 ℃ 75 ℉ 33 ℃91 ℉
Saturday 16 Dec 20 ℃ 68 ℉ 33 ℃92 ℉
Sunday 17 Dec 22 ℃ 71 ℉ 35 ℃95 ℉
Monday 18 Dec 24 ℃ 75 ℉ 32 ℃90 ℉

செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான பருவமே கோட்டயத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் இனிமையான இதமான சூழல் நிலவுவதால் இயற்கை அழகை ரசிக்கவும் பயண அனுபவத்துக்கும் உகந்ததாக காணப்படுகிறது.

கோடைகாலம்

கோட்டயம் பகுதி கடுமையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் பருவநிலையை கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதம் வரை இங்கு கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் 32° C முதல் 38° C வரை வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

ஜுன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நிலவும் மழைக்காலத்தில் கோட்டயம் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது. மழைக்காலத்தில் சூழல் குளுமையாகவும் இனிமையாகவும் காணப்பட்டாலும், கடும் மழையின் காரணமாக பயணிகள் வெளிச்சுற்றுலா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

கோட்டயம் பகுதியில் டிசம்பர் மாத துவக்கத்திலேயே ஆரம்பிக்கும் குளிர்காலம் பிப்ரவரி மாத இறுதி வரையில் நீடிக்கிறது இக்காலத்தில் வெப்பநிலை 16° C வரை குறைந்தும் அதிகபட்சமாக 30° C வரை உயர்ந்தும் காணப்படுகிறது. ஜனவரி மாதம் மிகக்குளிரான மாதமாகவும் காட்சியளிக்கிறது.