Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோழிக்கோடு » வானிலை

கோழிக்கோடு வானிலை

வருடம் முழுதுமே இனிமையான இதமான பருவநிலை கோழிக்கோடு பிரதேசத்தில் நிலவுகிறது. இருப்பினும் ஜுன், ஜூலை மாதங்களில் கடுமையான மழைப்பொழிவு உள்ளதால் அம்மாதங்களில் இப்பகுதிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக மழைக்கு பிந்தைய ஆகஸ்ட் மாதத்திலிருந்து, கோடைக்கு முந்தைய பிப்ரவரி மாதத்துக்கு இடைப்பட்ட பருவத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது மிகச்சிறந்தது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே மாதத்தின் பாதி வரை): கடற்பகுதியை ஒட்டியுள்ளதால் கோழிக்கோடு பிரதேசத்தில் கோடைக்காலம் அதிக ஈரப்பதத்தை கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதத்தின் பாதி வரை இங்கு கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை 37° C முதல் அதிகபட்சமாக 39° C வரை காணப்படுகிறது. கடற்கரைகளுக்கும், பறவைகள் சரணாலயத்துக்கும் விஜயம் செய்வதற்கு இக்காலம் ஏற்றதாகும். கோடையில் கோழிக்கோடு பிரதேசத்திற்கு விஜயம் செய்யும்போது பயணிகள் மெலிதான பருத்தி உடைகள் மற்றும் கண்ணுக்கு குளிர்கண்ணாடிகள் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் துவக்கம் வரை): ஜுலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாத துவக்கம் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் கோழிக்கோடு பிரதேசத்தில் இடைவிடாத பரவலான மழைப்பொழிவு காணப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு கடுமையான மழைப்பொழிவு இக்காலத்தில் நிலவுகிறது. அணைகள் மற்றும் கடற்கரைகளுக்கு சுற்றுலா மேற்கொள்ள இது உகந்த காலம் அல்ல. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஓணம் பண்டிகை என்பதால் அக்காலத்தில் ‘காலிகட் நகரம் திருவிழாக் கொண்டாட்டங்களால் உயிர் பெற ஆரம்பித்துவிடுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): குளிர் காலத்தில் கோழிக்கோடு பிரதேசம் இதமான குளுமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையுடன் பயணிகளை வரவேற்கும் பருவநிலை குளிர்காலத்தில் நிலவுகிறது. கடற்கரை சுற்றுலா, ஊர்சுற்றி பார்த்தல் மற்றும் படகுச்சுற்றுலா போன்ற எல்லா அம்சங்களுக்கும் இந்த குளிர்காலமே ஏற்றதாக உள்ளது. இரவில் வெப்பநிலை மிகக்குறைந்து அதிக குளிர் நிலவக்கூடும் என்பதால் கனமான உடைகளுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.