எப்படி அடைவது

17ம் எண் தேசிய நெடுஞ்சாலை கோழிக்கோடு மாவட்டத்தின் வழியே செல்வதால் கோழிக்கோடு நல்ல சாலைப்போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. கோழிக்கோடு வெளியூர் பேருந்து நிலையத்திலிருந்து கண்ணூர், தலசேரி, பாலக்காட் மற்றும் எர்ணாகுளம் போன்ற இதர கேரள நகரங்களுக்கு ஏராளமான பேருந்து சேவைகள் உள்ளன. இதன் அருகிலேயே உள்ள (KSRTC) கேரள மாநில அரசுப்போக்குவரத்துக்கழக நிலையத்திலிருந்து பெங்களூர், மைசூர் மற்றும் வயநாட் போன்ற நகரங்களுக்கு தொலைதூர பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர பெங்களூர், மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு சொகுசு பேருந்துகளும் கோழிக்கோடு நகரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.