சுற்றுலாப் பயணிகளிடம் அதிகமாகப் பிரபலமாகி வரும் குஃப்ரியின் சாகச விளையாட்டுக்களில் ஒன்று டொபாக்கனில் சறுக்குதல் ஆகும். முற்காலங்களில், பனி சூழ்ந்த மலைச் சரிவுகளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லப் பயன்படுத்தப்பட்ட சாதாரண ஸ்லெட்ஜ் வண்டியே டொபாக்கன் ஆகும்.
சவாரி செய்பவர் டொபாக்கனின் படுக்கை போன்ற பகுதியில் அமர்ந்து கொண்டு, காலை முன்புறம் நீட்டிக்கொண்டு, பாதங்களை, முன்புறம் உள்ள வளைவான பகுதியில் நுழைத்துக்கொண்டு பனி சூழ்ந்த மலைச் சரிவுகளில் சறுக்க வேண்டும். இது சுற்றுலாப் பயணிகளிடம் அதிகமாகப் பிரபலமாகி வரும் குளிர்கால விளையாட்டுக்களில் ஒன்று ஆகும்.



Click it and Unblock the Notifications