மவுண்டனீரிங் அல்லது சிகரமேற்றம் எனப்படும் அதிசாகச பொழுதுபோக்கு முயற்சிகளுக்கும் குல்லு சுற்றுலாத்தலம் புகழ்பெற்றுள்ளது. இங்கு எண்ணற்ற மலைகள் நிறைந்திருப்பதால் இதற்கு வசதியாக உள்ளது.
பயன்பாட்டில் இல்லாத ஏராளமான சிகரங்கள் மற்றும் அவற்றுக்கான அடிவார முகாம்களை குலு பகுதி கொண்டுள்ளது. அதிகம் அனுபம் இல்லாதவர்களுக்காக தேவ் திப்பா, பியாஸ் குண்ட் மற்றும் ஹனுமான் திப்பா போன்ற சிகரங்களும், அனுபவமிக்கவர்களுக்காக சந்த்ராதள், பியாஸ் குண்ட் மற்றும் மலானா கிளேசியர்ஸ் போன்ற சாகசச்சிகரங்களும் இங்கு அமைந்துள்ளன.
மணாலியில் உள்ள ஹிமாச்சல் மவுண்டனீரிங் இன்ஸ்டிடியூட் அண்ட் அலைட் ஸ்போர்ட்ஸ் எனும் மையத்தில் இது சம்பந்தமான தகவல்களை பயணிகள் பெறலாம். மேலும், சிகரமேற்றம் குறித்த பயிற்சி வகுப்புகள் மற்றும் விளக்க உரை நிகழ்ச்சிகளும் இந்த பயிற்சி மையத்தால் நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications